சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் சிரஞ்சீவிக்கு வில்லன் நடிகர் பொன்னம்பலம் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு கலியுகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம். செந்தூர பாண்டி, நாட்டாமை, முத்து, அமர்க்களம் என்று மாஸ் ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டில் மட்டும் ஜெய், கில்லி, அருள், ஜனா, அரசாட்சி, கிரி, ஏய், கோமதி நாயகம், கொடுகு, குடும்ப சங்கர், சூப்பர் டா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோவுக்கு இணையாக ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது காட்டேரி படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ஆவது சீசனிலும் கலந்து கொண்டார். சங்கர் குரு, பேர் சொல்லும் பிள்ளை, சத்யா, என் தங்கை கல்யாணி, கலியுகம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, உறுதி மொழி என்று பல படங்களில் ஸ்டண்ட் மேனாகவும் இருந்துள்ளார்.
அண்மையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சரத்குமார், கமல் ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பொன்னம்பலத்திற்கு உதவி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சிவி, சிறுநீர மாற்று அறுவை சிகிச்சைக்காக பொன்னம்பலத்திற்கு ரூ.2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொன்னம்பலம் வீடியோ வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கிட்னி மாற்ற ரூ.2 லட்சம் கொடுத்து உதவி சிரஞ்சீவி அண்ணனுக்கு நன்றி. இந்த உதவியை நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Popular stunt choreographer and actor #Ponambalam thanks megastar @KChiruTweets for helping with an amount of 2 Lakhs rupees for his kidney transplant operation. pic.twitter.com/cckeluVk8C
— Chennai Times (@ChennaiTimesTOI) May 21, 2021