ஹிந்தியில் உருவாகும் மாஸ்டர் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் கிட்டத்தட்ட ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்தது. ஓராண்டுக்குப் பிறகு திரைக்கு வந்த படங்களில் அதிக வசூல் குவித்தமாக மாஸ்டர் கருதப்படுகிறது.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கும் சிறுவர்களை காப்பாற்றும் கதையை மையடுத்தி உருவாக்கப்பட்ட இந்த பள்ளியில் விஜய், துரைராஜ் (ஜேடி) என்ற ரோலில் வாத்தியாராக நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கொடுத்த மாஸ்டர் படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிருந்த நிலையில், தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது.
மாஸ்டர் பட ஹிந்தி ரீமேக் உரிமையை என்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை சினி1 ஸ்டூடியோஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக என்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், மாஸ்டர் ஹிந்தி ரீமேக் உரிமையின் விஜய் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2022 ஆம் ஆண்டு மாஸ்டர் ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.