முருங்கைக்காய் சிப்ஸ் பட த்தில் இடம்பெற்றுள்ள ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல என்ற பாடலை குக் வித் கோமாளி 2 பிரபலம் ஷிவாங்கி தனது குரலில் பாடியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அதன் பிறகு குக் வித் கோமாளி 1 மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 ஆகியவற்றின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். முதல் சீசனை விட குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் தான் அஸ்வின் உடனான ஷிவாங்கியின் கெமிஸ்டரியால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் Behindwoods சார்பில் ஷிவாங்கிக்கு விருது வழங்கப்பட்டது. குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், ஷிவாங்கிக்கு தனது டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார். இப்படி தொடர்ந்து ஷிவாங்கிக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும், பாடும் வாய்ப்பும் குவிந்து வருகிறது.
இவ்வளவு ஏன், அஸ்வினின் மியூசிக் ஆல்பம் ஒன்றில் ஷிவாங்கி பாடியுள்ளார். இந்த நிலையில், தற்போது சாந்தனு நடிப்பில் உருவாகி வரும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள டாகு லெஸ்ஸூ ஒர்க் மோரு என்ற பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை அவரது நெருங்கி நண்பர் சாம் விஷாலும் பாடியுள்ளார்.
இயக்குநர் ஸ்ரீஜார் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, கே பாக்யராஜ், யோகி பாபு, மனோ பாலா, மதுமிதா, முனீஷ்காந்த் உள்பட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். லிப்ரா ரவிந்தர் சந்திரசேகரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். தரண் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வரை இந்தப் பாடல் யூடியூப்பில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.
NOW TRENDING #TalkuLessuWorkMoreu from #MurungakkaiChips ! 😍🔥
➡️ https://t.co/6R2KS9ifr9@FirstManFilms @imKBRshanthnu @AthulyaOfficial @dharankumar_c @Srijar_Director @sivaangi_k @LIBRAProduc @samvishal280999 #KuKarthik pic.twitter.com/X1gKGKybRx
— Sony Music South (@SonyMusicSouth) May 28, 2021