Home celebrities Simbu: விஜய் ஃபர்த்டே டிரீட் கொடுக்கும் சிம்பு: மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ரிலீஸ்!

Simbu: விஜய் ஃபர்த்டே டிரீட் கொடுக்கும் சிம்பு: மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ரிலீஸ்!

639
0

சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்ட து. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாநாடு பட த்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேஜி அமரன், எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், டேனியல் போப், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் இரவு நேர ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாடு முதல் கடந்த 14 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளிவரவில்லை.

இதைத் தொடர்ந்து மாநாடு முதல் டிராக் விரைவில் வெளிவரும் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 21 ஆம் தேதி மாநாடு முதல் சிங்கிள் டிராக் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு #MashaAllah என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சிம்புவின் மாநாடு வெளியாக இருக்கிறது என்று தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Previous articleSita Movie: சீதாவுக்காக ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை!
Next articleஆர்பி சௌத்ரி மீது விஷால் போலீசில் புகார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here