முதல்வரின் கொரோனா நிவாரண பணிக்காக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது அபெக்ஸ் லேபரடரி நிறுவனம் மூலமாக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அண்மையில், சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி கொரோனா நிவாரண நிதியாக அளித்திருந்தது.
தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள். பொது மக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
My father-in-law Mr. S.S.Vanangamudi, husband Vishagan, his sister and I visited the honorable Chief minister @mkstalin sir this morning to hand over our contribution of 1cr for the chief ministers #CoronaReliefFund from our pharma company Apex laboratories, Makers of #Zincovit pic.twitter.com/jXDEIXaM3V
— soundarya rajnikanth (@soundaryaarajni) May 14, 2021
இதையடுத்து, சினிமா பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலா ரூ.25 லட்சம், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் குடும்பமாக ரூ.1 கோடி, இயக்குநர் சி எஸ் அமுதன் ரூ.50 ஆயிரம் என்று நிதியுதவி அளித்துள்ளனர்.
தல அஜித் முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியிருப்பதாவது: வங்கி பரிவர்த்தனை மூலமாக அஜித் குமார் முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார். ஆனால், சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் தான் ரூ.1 கோடி வழங்கியுள்ளார் என்று செய்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் குளறுபடி.
ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அவர்களது Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
ரஜினிகாந்த் கொடுத்ததாக தகவல் பரவுகிறது. உண்மையில்லை..#CMReliefFund
— Aathiraa Anand (@AnandAathiraa) May 14, 2021