கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அண்மையில், சன் டிவி நிறுவனம் ரூ. 30 கோடி கொரோனா நிவாரண நிதியாக அளித்திருந்தது. தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் வைத்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள். பொது மக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சிவக்குமார் கூறியிருப்பதாவது: முதலில் மீடியாக்கார ர்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மக்களையும் பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள். தமிழில் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது நடிகர் சூர்யாவும் உடனிருந்தார்.
At the CMO today, #ActorSivakumar @Suriya_offl and @Karthi_Offl handed over a Chq for ₹ 1Cr to Hon’ble Chief Minister @mkstalin #TNCMReliefFund pic.twitter.com/Qw0IeymRjh
— Ramesh Bala (@rameshlaus) May 12, 2021