சூர்யா நடிப்பில் உருவாகி வரும் நவரசா வெப் சீரிஸ் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. கடந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக துணிச்சலாக தனது சூர ரைப் போற்று பட த்தை நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட்டார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, பாடல்களும் ஹிட் கொடுத்தன. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா40 படத்திலும், ஞானவேல் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இது தவிர, முதல் முறையாக சூர்யா நவரசா என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். குயீன் மற்றும் பாவக் கதைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன், நவரசா என்ற வெப் தொடரின் ஒரு எபிசோடை இயக்கியுள்ளார். கமலும் காதம்பரியும் என்ற எபிசோடில் சூர்யா நடித்துள்ளார்.
இதே போன்று குட்டி ஸ்டோரி என்ற வெப் தொடரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு எபிசோடில் நடித்துள்ளார். இந்த எபிசோடில் இவருடன் இணைந்து பிரகாஷ் ராஜ் மற்றும் ரேவதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூர்யா, விஜய் சேதுபதியைத் தொடர்ந்து காமெடி நடிகர் யோகி பாபுவும் நவரசா வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில், 2 எபிசோடுகளில் வலம் வருகிறார். அந்த எபிசோடுகளை ஹலீதா சமீன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
மேலும், சித்தார்த், பார்வதி திருவோது, பவல் நவகீதன், அம்மு அபிராமி, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் ஒரு எபிசோடிலும், ஸ்ரீ ராம் ஒரு எபிசோடிலும், அரவிந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் ஒரு எபிசோடிலும், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் ஒரு எபிசோடிலும், அதிதி பாலன் ஆகியோர் ஒரு எபிசோடிலும் நடித்துள்ளனர்.
நவரசா என்ற வெப் சீரிஸ் வரும் 9 எபிசோடுகளை ரதீந்திரன் ஆர் பிரசாத், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கௌதம் மேனன், ஹலீதா சமீன், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நரேன் ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் நவரசா ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், நவரசா எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம், அதுவும் 6ஆம் தேதியே நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே காஜல் அகர்வால், பூர்ணா, தமன்னா, அதிதி பாலன், விஜய் சேதுபதி ஆகியோர் வெப் சீரிஸில் நடித்துள்ள நிலையில், தற்போது சூர்யாவும் வெப் சீரிஸில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நவரசா வெப் சீரிஸூக்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெப் சீரிஸ்களிலும் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Netflix’s star studded #Navarasa is eyeing for an August 2021 release, tentatively August 6th. pic.twitter.com/fMJTaDTEfv
— LetsOTT GLOBAL (@LetsOTT) May 27, 2021