Home celebrities Ki Rajanarayanan: ஞானத்தந்தையை இழந்துவிட்டேன்: கிரா மறைவுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி!

Ki Rajanarayanan: ஞானத்தந்தையை இழந்துவிட்டேன்: கிரா மறைவுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி!

370
0

ஞானத்தந்தையை இழந்துவிட்டேன் என்று எழுத்தாளர் கி ராஜாநாராயணன் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கிரா என்றழைக்கப்படும் எழுத்தாளர் கி ராஜாநாராயணன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 99. கரிசல்காட்டு கடுதாசி, கோபல்ல கிராமத்து மக்கள், கோபல்ல கிராமம், அழிந்து போன நந்தவனங்கள், அந்தமான் நாயக்கர் என்று ஏராளமான படைப்புகளின் வாயிலாக தமிழ் இலக்கிய உலகிற்கு தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

இலக்கிய சிந்தனை விருது, சாகித்ய அகாடமி விருது, தமிழ் இலக்கிய சாதனை விருது என்று பல விருதுகளை பெற்ற கிரா புதுச்சேரியில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் பிறந்த 10 மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை, 99 வயது வாழ்ந்த கிரா அவர்களை இழந்து விட்டேன். கிரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கும், அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.

அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleCorona Relief Fund: சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் ரூ.10 கோடி நிதியுதவி!
Next articleAlphonse Puthren: என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும்: பிரேம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here