குரங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்காகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர்.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்ட த்திற்குப் பிறகு தளர்வுகளின்றி வரும் 31 ஆம் தேதி வரையில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தெரு நாய்கள் உள்பட கால்நடைகள், குரங்குகள் முதல்கொண்டு உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிரமப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் குரங்குகளின் தாகம் தீர்ப்பதற்காகவே தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அளவுக்கு அதிகமாகவே குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் குரங்குகளுக்கு உணவு, பழங்கள் கொடுத்து வருகின்றனர். தற்போது லாக்டவுன் என்பதால், அவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக புதுக்கோட்டையில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்த கோயிலுக்கு அருகில் தண்ணீர் தொட்டியும், உணவு, பழங்களுக்கு என்று தனியாக ஒரு மேடையும் அமைத்துக் கொடுத்துள்ளனர். அதோடு, பழங்களும், தண்ணீரும் கொடுத்து வருகின்றனர். தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது . தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு குரங்குகளின் பயன்பாடுக்கு தண்ணீர் & வாழைப்பழங்கள pic.twitter.com/w9wx8j6bc2
— Ramesh Bala (@rameshlaus) May 23, 2021