Home celebrities Chiyaan Vikram: என்ன ஒரு டெடிகேஷன்: இவரு வேற லெவல்: வைரலாகும் கோப்ரா பட புகைப்படங்கள்!

Chiyaan Vikram: என்ன ஒரு டெடிகேஷன்: இவரு வேற லெவல்: வைரலாகும் கோப்ரா பட புகைப்படங்கள்!

814
0

சியான் விக்ரம் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கோப்ரா படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். படங்களின் கதைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டு தன்னை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். உதாரணமாக விக்ரம் நடிப்பில் வந்த சேது, அந்நியன், ஐ என்று பல படங்களை கூறலாம்.

கடைசியாக சியான் விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் படம் வெளியானது. இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, சியான்60, துருவ நட்சத்திரம் என்று பல படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்தையும் கச்சிதமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஒவ்வொரு படங்களின் அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் கோப்ரா. இந்தப் படத்தில் சியான் விக்ரம் கிட்டத்தட்ட 15 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் மியா ஜார்ஜ், கே எஸ் ரவிக்குமா, இர்பான் பதான், கனிகா, ஆனந்தராஜ், ரேணுகா, ரோபோ ஷங்கர், பூவையார், டிஎஸ்ஆர், சிந்து ஷ்யாம், மிர்ணாளினி ரவி, பத்மப்ரியா ஜானகிராமன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்தின் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கோப்ரா டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், கோப்ரா படத்தின் விக்ரம் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர். அதில், விக்ரம் வெள்ளை நிற மீசையுடன் கருப்பு தாடியுடன் தோற்றமளிக்கிறார். அது மேக்கப் செய்யும் போது எடுத்த புகைப்படம் என்று தெரிகிறது. தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here