தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் (சரவணா ஸ்டோர் அண்ணாச்சி) அறிமுகப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.
சென்னை தி.நகர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர். தி.நகரில் துவங்கி சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் சரவணா ஸ்டோர் கிளைகள் திறக்கப்பட்டு விட்டன.
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் அதன் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கத் துவங்கினார். கடை விளம்பரத்தில் ஆரம்பித்து இன்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து நடித்துக்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தை இயக்குபவர்கள் ஜே.டி மற்றும் ஜெரி. இவர்கள் இதற்குமுன் உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கி உள்ளனர்.
அதன் பிறகு ஜே.டி மற்றும் ஜெரி இருவரும் விளம்பரப் படங்களை இயக்க ஆரம்பித்தனர். சரவணா ஸ்டோர் விளம்பரங்களை இவர்கள் இயக்கியதன் மூலம் சரவணன் அருளுடன் நல்ல நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பே சரவணன் அருளை திரைப்படத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை துண்டியது. சரவணன் அருள் நடிப்பதற்கு முக்கியக்காரணம் ஜே.டி மற்றும் ஜெரி.
2019-ம் ஆண்டு அறிவிப்பு வெளியான நிலையில் இன்னும் இந்தப் படத்திற்கு பெயரிடப்படவில்லை. சென்ற ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் மிகப்பெரிய அரங்கு அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
கொரோனா லாக்டவுன் முடிந்து தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ரோபோ சங்கரை அடித்த ரவுடிகளை சரவணன் அண்ணாச்சி துவம்சம் செய்வதுபோல் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது.