நடிகர் விஜய் சேதுபதி கொரோனா தடுப்புப் பணிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், மகிழ், விடுதலை, மும்பைகார், கடைசி விவசாயி, காந்தி டாக்கீஸ், இடம் பொருள் ஏவல், லாபம் என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவக்குமார் ரூ.1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ரூ.25 லட்சம், இயக்குநர்கள் ஷங்கர், மோகன் ராஜா, வெற்றிமாறன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு நிதியுதவி அளித்த பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். ஆம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor @VijaySethuOffl today contributed a sum of ₹ 25 Lakhs to the Tamil Nadu Chief Minister’s Relief fund. The actor met Honourable TN Chief Minister @mkstalin at the Secretariat and presented a cheque for the amount. pic.twitter.com/SSk71TBFkV
— Ramesh Bala (@rameshlaus) June 15, 2021
'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், திரைப்பட நடிகர் திரு. விஜய் சேதுபதி அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 இலட்சம் வழங்கினார்'#CMMKStalin #TNCMPRF pic.twitter.com/0ApU4M6sTL
— DMK (@arivalayam) June 15, 2021
தர்மம் தலை காக்கும் அண்ணா