மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடகர் வேல்முருகன் உயிர் காக்கும் கேடயமே தடுப்பூசி என்று பாடல் பாடிக் கொண்டே இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், பின்னணி பாடகர் வேல்முருகனும் இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். பாடல் பாடிக் கொண்டே பாடல் பாடியதோடு, கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இதோ அவர் பாடிய பாடல்….
உயிர் காக்கும் கேடயமே தடுப்பூசி
நம்ம உயிரைக் காக்கும் கேடயமே தடுப்பூசி
உயிர் தொற்றை அழிக்கும் ஆயுதமே தடுப்பூசி
நம்மை காக்கும் இந்த முகக் கவசம்
சமூக தொற்றை ஒழிக்கும் முகக் கவசம்
நம் முதல்வர் சொல்லும் வழியிலே நாம் நடப்போம்
முக்கியமாய் கொரோனாவை வென்றெடுப்போம்
அச்சம் தேவையில்லை நலமே
வாருங்கள் மக்களே வாருங்கள்
தடுப்பூசி இன்றே போடுங்கள்…