விஜய் எடுத்த செல்பி (vijay selfie): மாஸ்டர் படப்பிடிப்பின்போது ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் நின்று விஜய் எடுத்துக்கொண்ட செல்பி மீண்டும் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அரசியல் அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வழுக்கட்டயமாக காரில் இழுத்துச்சென்று வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் விஜய் மீது, வரி ஏய்ப்பு செய்ததற்கான எந்த ஒரு குற்றப்பத்திரிக்கையும் வருமானவரித்துறையினர் சமர்பிக்கவில்லை.
விஜய் எதற்காக வருமானவரித்துறையினரால் மிரட்டப்பட்டார் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால், அதன்பின்பு நடந்தது வேறு!
விஜய்யை வருமானவரித் துறையினர் காரில் அழைத்துச் செல்வதைக் கண்டவுடன் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.
நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு கார், பஸ், வேன் மூலம் வந்து ரசிகர்கள் குவிந்துவிட்டனர். நெய்வேலியே அன்று ஸ்தம்பித்து விட்டது.
தன்னுடைய பலம் என்ன என்று? விஜய், ரசிகர்களுக்கு மத்தியில் நின்று ஒரு செல்பி எடுத்து; தனக்கு அழுத்தம் கொடுத்த அனைவருக்கும் சைலண்டாக பதில் கூறினார்.
அந்த செல்பி எடுத்து ஒரு வருடம் முடிந்ததை ரசிகர்கள் இன்று #1YearOfMasterSelfie என ஹாஸ்டாக் மூலம் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.