நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்களில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்தும் ஒருவர். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரைத் தொடர்ந்து, இயக்குநர் தாமிரா, பாண்டு, டிகேஎஸ் நடராஜன், நெல்லை சிவா, நடிகர் மணிமாறன், ஆட்டோகிராஃப் கோமகன், தாதா87 பட தயாரிப்பாளர் கலைச் செல்வன் என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வந்தனர். இந்த நிலையில், தற்போது நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
ஆம், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிந்துஜாவைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜூம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில், அவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Saddened To Hear That
Our @Arunrajakamaraj‘s Wife Has Passed Away Today Due To COVID.Stay Strong Brother 🙏 We Are Always With You!
Our deepest condolences 🙏 #ArunrajaKamaraj pic.twitter.com/DLoHArGsTG
— SK FANS TEAM (@SKFans_Team) May 17, 2021
ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ, மரகத நாணயம், யானும் தீயவன், காத்திருப்போர் பட்டியல், நட்புனா என்னானு தெரியுமா, க/பெ.ரணசிங்கம் ஆகிய படங்களில் அருண்ராஜா காமராஜ் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதோடு, பீட்ஸா, ஜிகர்தண்டா, டிமாண்டி காலனி, தெறி, கபாலி, கொடி, பைரவா, காலா, கனா, அசுரன், தர்பார், மாஸ்டர் ஆகிய படங்களுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
மேலும், ஜிகர்தண்டா, டிமாண்டி காலனி, கொடி, பைரவா, அசுரன், நிபுணன், கபாலி ஆகிய படங்களில் பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
An update about #ArunRajaKamaraj who is getting treated for #Covid in a private hospital in Chennai..
He is responding well to the treatment.. He is stable.. He may be discharged soon.. https://t.co/AEaFPLdAuR
— Ramesh Bala (@rameshlaus) May 17, 2021