தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் டி43 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். அண்மையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் பட த்தைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் படம் வெளியாக இருக்கிறது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் டி43 பட த்தில் நடித்து வருகிறார். இந்தப் பட த்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவில் நடந்து வரும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது வரை தனுஷ் தி கிரே மேன் படத்திற்காக அமெரிக்காவில் இருக்கிறார். விரைவில் இந்த பட த்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அவர் டி43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கூடிய விரைவில் டி43 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.
மேலும், மகேந்திரன், பிரசன்னா ஆகியோரும் டி43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.