Home celebrities Ore Raththam Director: முதல்வரின் முதல் படத்தை இயக்கிய இயக்குநர் காலமானார்!

Ore Raththam Director: முதல்வரின் முதல் படத்தை இயக்கிய இயக்குநர் காலமானார்!

1075
0

மறைந்த இயக்குநர் சொர்ணம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ஒரே ரத்தம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சொர்ணம். இந்தப் படத்தின் மூலமாகத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகரானார். ஒரே ரத்தம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் சொர்ணம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் தலைவராகவும், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

முத்துராமன் நடிப்பில் வந்த சீர்வரிசை, ஜெய்சங்கர் நடிப்பில் வந்த ஆசை மனைவி, நீ ஒரு மகாராணி, சிவகுமார், கமல் ஹாசன் நடிப்பில் வந்த தங்கத்திலே வைரம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். குடியிருந்த கோயில், ராமன் தேடிய சீதை, பட்டிக்காட்டு பொன்னையா, குமரி கோட்டம், இதய வீணை, ஒளிவிளக்கு, என் அண்ணன், நம்நாடு, தாயின் மடியில் ஆகிய படங்களுக்கு வசன கர்த்தாவாகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சொர்ணம், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இயக்குநர் சொர்ணம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று சொர்ணம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞருடன் முரசொலியிலும், கழக தலைவர் அவர்கள் நடத்திய இளையசூரியன் ஏட்டிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்; திரைப்பட இயக்குனர் – வசன கர்த்தா – அரசியல் என இயங்கிய சொர்ணம் மாமா அவர்களின் மறைவையடுத்து அவரது உடலுக்கு இன்று மரியாதை செய்தோம். குடும்பத்தாருக்கு ஆறுதல்-ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleChiyaan60: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #CVFSaysBeVaccinated!
Next articleரகசியமாக 250 ரசிகர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய சூர்யா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here