Home celebrities VP10: வெங்கட் பிரபுவின் 10ஆவது படத்தில் ஒரு ஹீரோ, 3 ஹீரோயின்!

VP10: வெங்கட் பிரபுவின் 10ஆவது படத்தில் ஒரு ஹீரோ, 3 ஹீரோயின்!

312
0

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது 10ஆவது படத்தில் ஒரு ஹீரோவும், 3 ஹீரோயினும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சென்னை 600028 படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விஜய் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். சிறந்த குடும்ப படத்திற்காக தமிழ்நாடு மாநில விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை 600028 படத்திற்குப் பிறகு சரோஜா, கோ, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 பார்ட் 2, பார்ட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்கியுள்ள சிம்புவின் மாநாடு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அண்மையில் தான் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.

மாநாடு படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் இயக்குவது குறித்து வெங்கட் பிரபு அறிவிப்பு வெளியிட்டார். ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் தயாரிப்பில் தனது 10ஆவது படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில், இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருப்பதாவும், இவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தப் படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு வெங்கட் பிரபுவின் 10ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயால்!
Next articlePranitha Subhash Marriage Photo: சிம்பிளா திருமணம் செய்த சகுனி நடிகை பிரணிதா சுபாஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here