Home celebrities முதல் தடுப்பூசி டன்: ஜனனி ஐயர்!

முதல் தடுப்பூசி டன்: ஜனனி ஐயர்!

749
0

நடிகை ஜனனி ஐயர் நேற்று தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜனனி ஐயர். கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரு திரு திரு திரு என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையான அறிமுகமானார். ஆனால், இந்தப் படம் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. இதே போன்று விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படமும் கதாபாத்திரம் பேசவில்லை. அப்போது தான் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அவன் இவன் படத்தில் நடித்தார்.

அப்புறம் என்ன, பாகன், தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி உல்டா, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தொல்லைகாட்சி, கசட தபற, பாகீரா, யாக்கை திரி, முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாட்டையே உலுக்கி வரும் கொரோனா காரணமாக 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ரஜினிகாந்த் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஜனனி ஐயர் நேற்று தனது முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகை ஜனனி ஐயர், டுவிட்டர் பக்கத்தில் தனது சாதியின் அடையாளமான ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வெறும் ஜனனி என்ற பெயரில் டுவிட்டர் கணக்கை தொடர்ந்து வருகிறார். அதோடு, அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாற்றம் ஒன்றே மாறாதது. என்றும் ஒற்றுமையுடன்- ஜனனி! என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜன்னியின் இந்த மாற்றத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், விக்கிபீடியா பக்கத்தில் ஜனனி ஐயர் என்ற பெயரே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleSahithya Jagannathan Twins: டுவின்ஸ் பிறந்த சந்தோஷத்தில் பார்த்திபன் பட நடிகை சாஹித்தியா ஜெகன்னாதன்!
Next articleமுதுகில் வட்ட வட்டமா இருக்கு: கப்பிங் தெரபி செய்து கொண்ட விஷ்ணு விஷால்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here