வயது மூப்பு காரணமாக கல்யாணராமன் பட இயக்குநர் ஜி என் ரங்கராஜன் இன்று காலை காலமானார்.
அண்மை காலமாக தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலரும் வயது மூப்பு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கமல் ஹாசன் நடிப்பில் வந்த மீண்டும் கோகிலா, கடன் மீன்கள், கல்யாணராமன், எல்லாம் இன்ப மயம், மகராசன், மீண்டும் பல்லவி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பழம்பெரும் இயக்குநர் ஜி என் ரங்கராஜன்.
இப்படி பல மாஸ் படங்களை கொடுத்த இயக்குநர் ஜி என் ரங்கராஜன் (90) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார். இன்னும் 10 ஆண்டுகள் இருந்திருந்தால் 100 வயதை நிறைவு செய்திருப்பார். ஜி என் ரங்கராஜன் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா, நினைத்தாலே இனிக்கும், சினம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜி என் ஆர் குமரவேலனின் தந்தை தான் இந்த ஜி என் ரங்கராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி என் ரங்கராஜன் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.