கொரோனா லாக்டவுன் காரணமாக தனது திருமணத்தை நடிகை மெஹ்ரின் பிர்ஷாதா தள்ளி வைத்துள்ளார்.
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்ஷாதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரனான பவ்யா பிஷ்னோயிக்கும் – மெஹ்ரினுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நட ந்த து. இதைத் தொடர்ந்து திருமணமும் நடக்க இருந்த து. இந்த நிலையில், தான் கொரொனாவின் 2ஆவது அலையின் தாக்கம் இந்தியாவில் மீண்டும் தலை தூக்கியது. கொரோனாவிற்கு ஏராளமானோர் பலியான நிலையில், பலரும் பாதிக்கப்பட்டனர்.
அதில், மெஹ்ரினும், அவரது அம்மாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தான் திருமணத்தையே தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து மெஹ்ரின் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இந்த இக்கட்டான சூழலில் திருமணத்தை பாதுகாப்பாக நடந்துவது என்பது கடினமான ஒன்று. யாருக்கு பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது.
எனவே திருமணத்தை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கலாம் என்று யோசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலக மெஹ்ரின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.