கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனையும் மீறி சினிமா படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை சாந்தினி தமிழரசன் டுவீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கையும் மீறி திரைப்படப் படப்பிடிப்புகள் நடப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை சாந்தினி ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சித்து +2 பட த்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். தொடர்ந்து வில் அம்பு, கவண், கட்டப்பாவ காணோம், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி, பெட்டிக்கடை, காதல் முன்னேற்ற கழகம், நான் அவளை சந்தித்த போது, எட்டித்திக்கும் பற ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதோடு, ரெட்டி ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், சினிமா படப்பிடிப்புகள், டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை சாந்தினி தமிழரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும், அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முழு லாக்டவுன் தான் நடைமுறையில் இருக்க வேண்டும்? அப்படியிருக்கும் போது எப்படி மறைமுகமாக சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன? மக்களின் உயிர் தான் தற்போது மிகவும் முக்கியம். நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இது தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.