பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த நடிகை சாஹித்யா ஜெகன்நாதன் தனது டுவின்ஸ் பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்றவர் நடிகை சாஹித்யா ஜெகன்நாதன். 2014 ஆம் ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியாவின் முதல் 25 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார். கடந்த 2017ல் நடந்த புரோ கபடி லீக்கை தொகுத்து வழங்கினார். இப்படி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கட்டுரையாளராகவும், மாடலாகவும், நடிகையாகவும் திகழ்கிறார்.
ஆம், கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த நீதானே என் பொன் வசந்தம் என்ற பட த்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்துள்ளார். அதன் பின், பார்த்திபன் இயக்கத்தில் வந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலும், தளபதி விஜய்யின் பிகில் படத்திலும் நடித்துள்ளார்.
சாஹித்யா ஜெகன்நாதன், கேரி எட்வர்ட்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சாஹித்யா ஜெகன்நாதன் மற்றும் கேரி எட்வர்ட்ஸ் தம்பதியினருக்கு ஆண் மற்றும் பெண் என்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி டுவின்ஸ் பிறந்த மகிழ்ச்சியை தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
இது குறித்து சாஹித்யா ஜெகன்நாதன் கூறியிருப்பதாவது: எனது ஆண் குழந்தை, பெண் குழந்தை மற்றும் நானும் நலமாக இருக்கிறோம். உங்களது அன்பு, ஆதரவு மற்றும் கருணை உள்ளத்திற்கு நன்றி. பல அம்மாமார்கள் நான் கர்ப்பமாக இருக்கும் போது பல டிப்ஸ் கொடுத்தார்கள். உதவிக்குறிப்புகளை எனக்கு தொடர்ந்து கொடுங்கள். நான் மொபைல் போன் மற்றும் செய்திகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றால், கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஏனென்றால், இரு குழந்தைகளுக்கு நான் தாய். பெற்றோர் என்ற உணர்வு, பாடத்திற்கு வெளியே இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்று இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
சாஹித்யா ஜெகன்நாதன் மற்றும் கேரி எட்வர்ட்ஸ் தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram