Home celebrities ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்: ஷகீலா!

ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்: ஷகீலா!

293
0

லாக்டவுன் காரணமாக உணவின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக ஆட்டோகிராஃப் கோமகன், நடிகர் பாண்டு, அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, வெங்கட் சுபா, இயக்குநர் தாமிரா, கே வி ஆனந்த் என்று சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் பலரும் உணவளித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகையும், குக் வித் கோமாளி 2 பிரபலமுமான ஷகீலா உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அவர்களின் பசியை போக்க உணவளித்து வருகிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்களுக்கு இருக்கும் 2 கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் முயன்ற அளவிற்கு ஏழை எளிய மக்களுக்கு உதவுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகொரோனா பணிகளுக்காக இயக்குநர் லிங்குசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி!
Next articleJanani Twitter: சாதியை தூக்கி எறிந்த ஜனனி: குவியும் பாராட்டுக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here