சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 5 படங்களில் நடிப்பதற்கு கையெழுத்திட்டுள்ளதாகவும், சம்பளமாக ரூ.75 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக முன்னேறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினாவில் தொடங்கிய பயணம் தற்போது டாக்டர், அயலான், டான் வரையில் வந்துள்ளது. இதற்கிடையில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை கடந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 5 படங்களுக்கும் சம்பளமாக ரூ.75 கோடி வரையில் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த து. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட து. இதுவரையில், படம் எப்போது ரிலீசாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை.
ஏற்கனவே சன் டிவி நிறுவனம் டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது. ஆனால், சேட்டிலைட் உரிமத்தோடு படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கேட்கிறதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு சன் டிவி நிறுவனம் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா மற்றும் அயலான் ஆகிய 4 படங்கள் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தொடர்ச்சியாக 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் இப்போதைக்கு நடிக்க மாட்டார் என்று தெரிகிறது. மேலும், இந்த 5 படங்களின் இயக்குநர்கள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leading production house #SunPictures have signed #Sivakarthikeyan for a 5 film deal. Over the next 2 years he shall finish these movies. Discussions going on for the directors. Pandiraj – Sk combination likely to happen again…. pic.twitter.com/G0VtUQR7uV
— Tamil Exclusive OTT Updates (@ott_exclusive) June 9, 2021