Home celebrities Valimai: அஜித்தின் சினிமா வாழ்க்கையில் வலிமை ஒரு மைல்கல்லாக இருக்கும்: ஆர் கே சுரேஷ்!

Valimai: அஜித்தின் சினிமா வாழ்க்கையில் வலிமை ஒரு மைல்கல்லாக இருக்கும்: ஆர் கே சுரேஷ்!

392
0

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் வலிமை ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நடிகர் ஆர் கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். குடும்பக் கதையை பின்னணியாக கொண்டு வலிமை உருவாக்கப்பட்டு வருகிறது.

அஜித் உடன் இணைந்து ஹூமா குரேஸி, குக் வித் கோமாளி புகழ், சுமித்ரா, யோகி பாபு, கார்த்திகேயா கும்மகோண்டா, ஷிவாஜி குருவாயூர், ராஜ் அய்யப்பா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பைக் ஸ்டண்ட் காட்சியைத் தவிர மற்ற அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

பைக் ஸ்டண்ட் காட்சிக்காக படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், 100 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளுக்கு அனுமதி கிடைத்த பிறகே வலிமை பட த்தை வெளியிட வேண்டும் என்று அஜித் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியிருப்பதாவது: அஜித்தின் சினிமா வாழ்க்கையில் வலிமை ஒரு மைல்கல்லாக இருக்கும். பிரமிக்க வைக்கும் வகையில் ஆக்‌ஷன் ஸ்டண்ட் காட்சிகளை அஜித் செய்துள்ளார். வலிமை படத்தில் நடித்த ஒரு சில நடிகர்களுடன் பேசி வந்த ஆர் கே சுரேஷ், இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா: தடுப்பூசி போட்டது கன்ஃபார்ம்!
Next articleஆரோக்கிய சேது ஒர்க் ஆகல: கோவின்-ல பதிந்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன்: கல்யாணி பிரியதர்ஷன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here