Home celebrities தாமதிக்க வேண்டாம்: நடிகை வெண்பா வேண்டுகோள்!

தாமதிக்க வேண்டாம்: நடிகை வெண்பா வேண்டுகோள்!

804
0

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை வெண்பா தாமதிக்காமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, நகுல், காளிதாஸ் ஜெயராம், அமைரா தஸ்தூர், பென்னி தயால் மற்றும் அவரது மனைவி கேத்தரின் தங்கம் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது நடிகை வெண்பாவும் தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: இறுதியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எல்லோரும் கூடிய விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இது நமக்கும், நம்மைச் சுற்றி இருக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு. தயவு செய்து முகக் கவசம் அணியுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வெண்பா, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Previous articleவிஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி!
Next articleமிஸ்கின் முன் டிரெஸ்சே இல்லாமல் நின்ற ஆண்ட்ரியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here