Home celebrities Vikram 2021: ஓகே சொன்ன விஜய் சேதுபதி: கமல் ஹாசனுக்கு வில்லன் ரெடி!

Vikram 2021: ஓகே சொன்ன விஜய் சேதுபதி: கமல் ஹாசனுக்கு வில்லன் ரெடி!

406
0

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஓகே சொல்லியுள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

கார்த்தி நடிப்பில் வந்த கைதி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த து. அப்படி வெளியான படம் தான் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த து. என்னதான் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும் மாஸ்டர் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படமாக திகழ்ந்தது. அதோடு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – கமல் ஹாசன் உடன் கூட்டணி சேர்ந்தார். இவர்களது கூட்டணியில் விக்ரம் படம் உருவாகி வருகிறது. கமல் ஹாசனின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் பட த்தின் டைட்டில் டீசர் வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே இந்தப் படத்தை தயாரிக்கிறது.

மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில், விக்ரம் படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக முதலில் ராகவா லாரன்ஸ் பெயர் அடிபட்டது. ஆனால், அது உண்மையில்லை என்று தெரிந்த நிலையில், விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட து.

தற்போது அது உண்மையாகியுள்ளது. விஜய்யைத் தொடர்ந்து கமல் ஹாசனுக்கும் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமல் ஹாசனின் இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா லாக்டவுன், இயக்குநர் ஷங்கர் – லைகா பிரச்சனை, சட்டமன்ற தேர்தல் 2021, கொரோனா லாக்டவுன் 2021 என்று வரிசையாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிற்கு தடை ஏற்பட்டு வந்தது. தற்போது கூட, இந்தியன் 2 படப்பிடிப்பு முடிக்கப்படும் வரையில் இயக்குநர் ஷங்கருக்கு எந்தப் படமும் கொடுக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக கமல் ஹாசன் முதலில் விக்ரம் படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமுதல்வரின் கொரோனா நிவாரண நிதி: ஆன்லைன் மூலம் சியான் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!
Next articleArunraja Kamaraj: நண்பனுக்காக ஓடி வந்த சிவகார்த்திகேயன்: சிந்துஜா உடலுக்கு இறுதி மரியாதை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here