ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சூர்யா, விஜய், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஹன்சிகா நடிப்பில் 100 படம் மட்டுமே வெளியானது. அதுவும், 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படமும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், தற்போது ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள அவரது 50ஆவது படம் மஹா, விரைவில் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் யு.ஆர்.அஜ்மல் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி, மஹா கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இந்தப் பட த்தில் ஸ்ரீகாந்த், சிம்பு (சிறப்பு தோற்றம்), ப்ரியா ஆனந்த், தம்பி ராமையா, கருணாகரன், சனம் ஷெட்டி, நந்திதா ஜெனிஃபர், சுஜித் சங்கர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் பட த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, இந்தப் படத்தில் சாமியார் கெட்டப்பில் இருந்து கொண்டு ஹன்சிகா புகைபிடிப்பது போன்று போஸ்டர் இடம் பெற்றிருந்த நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியது.
கிட்ட த்தட்ட ஓராண்டுக்கும் மேலாக ஆன நிலையிலும் இதுவரையில் திரைக்கு வருவது குறித்து எந்த அறிகுறியும் தென்படவில்லை. தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. விரைவில் மஹா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹா பட த்தைத் தவிர வேறு எந்தப் படமும் ஹன்சிகாவுக்கு இல்லை. ஆனால், நஷா என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிட த்தக்கது.