Home Celebrities ரம்ஜானுக்கு பாட்டு வராது: சுரேஷ் காமாட்சி அறிவிப்பு!

ரம்ஜானுக்கு பாட்டு வராது: சுரேஷ் காமாட்சி அறிவிப்பு!

144
0

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால், மாநாடு படத்தில் முதல் பாடல் வரும் 14 ஆம் தேதி வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்ட து. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாநாடு பட த்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேஜி அமரன், எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், டேனியல் போப், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் இரவு நேர ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் முதல் பாடல் வரும் 14 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது.

ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, வரும் 14 ஆம் தேதி அன்று மாநாடு படத்தின் முதல் பாடல் வெளிவராது என்றும், மற்றொரு நாளில், முதல் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here