ஆடுகளம் படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்த த்ரிஷாவின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஜோடி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின், மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம், விண்ணைத்தாண்டி வருவாயா, குருவி, என்னை அறிந்தால், பேட்ட, 96 என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, ராங்கி, ராம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வளவு ஏன், வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த ஆடுகளம் படத்திலும் கூட த்ரிஷா நடித்துள்ளார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தனுஷுடன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இப்படத்திலிருந்து த்ரிஷா விலகியதைத் தொடர்ந்து டாப்ஸி இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார். படமோ ஹிட் கொடுத்த து. பாடலோ அதுக்கும் மேலாக தாறுமாறாக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#Aadukalam Movie @trishtrashers @dhanushkraja #Dhanush #TrishaKrishnan pic.twitter.com/x0q4tFJE2G
— Karthik (@Kutty_Karthi64) May 13, 2021