இயக்குனர் கெளதம் மேனன், ரஜினி மற்றும் விஜய் ஏன் தன் படங்களில் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு மனம் திறந்து பதில் கூறியுள்ளார்.
20’களின் ட்ரெண்ட்செட் இயக்குனர். மின்னலே படம் துவங்கி பல படங்களில் காதலை வித்தியாசமான கோணத்தில் காட்டியவர்.
கவுதம் மேனன் படங்களில் நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் காத்துக்கிடந்த காலம் உண்டு. மாதவன், சிம்பு, சூர்யா ஆகியோர் கெளதம்மேனனுக்கு ஏற்ற கச்சிதமான நடிகர்கள்.
ஆனால், முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை கெளதம் மேனன் இயக்குவதில் சிக்கல் நிலவி வந்தது. கெளதம் மேனனுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டபோது அஜித், “என்னை அறிந்தால்” படத்தில் நடித்துக்கொடுத்தார்.
ரஜினி, விஜய் ஏன் இன்னும் உங்கள் படத்தில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு கெளதம் மேனன் பதில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “என் படங்களில் அவர்கள் நடித்தால், அது என் படம் எனப் பேசப்படும். அது அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தலாம். இதனால் தான் அவர்கள், என் படங்களில் நடிப்பதில்லை என நான் நினைக்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.