Home Celebrities Bigg Boss Tamil 5: இப்போதும் அதே நிலைமை தான்: பிக்பாஸ் 5 எப்போது?

Bigg Boss Tamil 5: இப்போதும் அதே நிலைமை தான்: பிக்பாஸ் 5 எப்போது?

265
0

பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் அதிகளவில் பிரபலமானது பிக்பாஸ். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நாட்டையே உலுக்கிய கொரோனா லாக்டவுன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை.

மாறாக, கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி வரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்ட து. தற்போது ஜூன் மாதமும் வந்துவிட்டது. ஆனால், பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சிக்கான எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 4 சீசன்களைப் போன்று பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 1ல் ஆரவ் டைட்டில் வின்னரானார். 2ஆவது சீசனில் ரித்விகா, 3ஆவது சீசனில் முகென் ராவ் மற்றும் 4ஆவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டில் வின்னராக வலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு பிரபலத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் முகென் ராவ் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். தர்ஷனும் ஹீரோவாக நடித்து வருகிறார். லாஸ்லியாவும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பிரபலமான அஸ்வின், பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, தீபா, பாலா, ஷிவாங்கி, புகழ், சரத், சுனிதா இவர்களில் யாரேனும் ஒருவர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாரதி கண்ணா சீரியல் புகழ் ரோஷினியும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறது தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here