நடிகர் டேனியல் பாலாஜி கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து அதிகளவில் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. கடந்த 2000 ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சித்தி தொலைக்காட்சியின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு அலைகள் என்ற தொடரிலும் நடித்தார். இந்த இரு தொடர்களின் மூலமாக ஏப்ரல் மாதத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் தொடர்ச்சியாக காதல் கொண்டேன், காக்க காக்க, சம்பா, பொல்லாதவன், என்னை அறிந்தால், பைரவா, இப்படை வெல்லும், மாயவன், வட சென்னை, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா 2ஆவது அலையின் பாதிப்பு காரணமாக தினந் தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. அதோடு, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சென்றாயன், அம்மு அபிராமி, கேரில்லா, ஆஜித், அல்லு அர்ஜூன் என்று சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், தற்போது வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியும் இணைந்துள்ளார். அதோடு, கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.