குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, ருத்ர தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே அதிகளவில் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. இந்நிகழ்ச்சியின் மூலமாக புகழ், பவித்ரா லட்சுமி, ஷிவாங்கி ஆகியோருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இந்நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான தர்ஷா குப்தாவிற்கும் பட வாய்ப்பு வந்து, அந்தப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ருத்ரதாண்டவம் பட த்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் திரௌபதி பட ஹீரோ ரிஷி ரிச்சர்டே ஹீரோவாக நடித்துள்ளார். அதுவும் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாகவும் ரிஷி நடித்துள்ளார். ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. திரௌபதி இசையமைப்பாளர் ஜூபின் தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முற்றிலும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தர்ஷா குப்தா உடன் செல்ஃபி எடுத்த புகைப்பட த்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் மோகன் ஜி, ருத்ரதாண்டவம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தர்ஷா குப்தா டப்பிங்கை முடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.