கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த இயக்குநர் கே வி ஆனந்த்தின் கோ படத்தில் சிம்பு நடித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்களில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்தும் ஒருவர். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கே வி ஆனந்த் இயக்கிய படங்களில் மாஸ் ஹிட் கொடுத்த படம் கோ. கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் ஜீவா, அஜ்மல், பியா பாஜ்பாய், கார்த்திகா, போஸ் வெங்கட், காஜல் பசுபதி, ஜெகன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ஆனால், முதலில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் போட்டோ எடுக்கும் காட்சிகளும், பாம் வெடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்ட து. ஆனால், அதன் பிறகு சில காரணங்களால் சிம்பு அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தான் ஜீவா அந்தப் படத்தில் நடித்தார்.
இயக்குநர் கே வி ஆனந்த் உயிரிழந்தைத் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்த சிம்பு, கோ படத்தை மிஸ் செய்த து தனக்கு வருத்தமானது என்றும் ஆனால், அவருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டிருந்தேன். அதற்குள்ளாக அவர் மறைந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், கோ படத்தில் சிம்பு நடித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட அவரது ரசிகர்கள் நீங்களே அந்தப் படத்தில் நடித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Here’re some unseen working still of #STR in #KVAnand‘s #Ko film which was dropped. Recently, before the demise of #KVAnand, This combo was all set to reunite for a fresh script. pic.twitter.com/oMrH0qgWja
— Simbu Times (@SimbuTimes) May 12, 2021