Home Celebrities ஃபேஸ்புக் பக்கத்த ஹேக் செஞ்சுட்டாங்க: மலையாள நடிகர் அனுப் மேனன்!

ஃபேஸ்புக் பக்கத்த ஹேக் செஞ்சுட்டாங்க: மலையாள நடிகர் அனுப் மேனன்!

168
0

தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக மலையாள நடிகர் அனுப் மேனன் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என்று பல திறமைகளை கொண்டவர் அனுப் மேனன். Kattuchembakam என்ற பட த்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பின் இவர், அனுபவ், கர்ரன்சி, ப்ரமனி, டிராஃபிக், காக்டைல், பாவா, கமலா, பிக் பிரதர் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் வலம் வருவதைவிட சமூக வலைதளங்களில் அதிகளவில் வலம் வருகிறார். ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட 15 லட்சம் வரையில் ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தை ஹேக் செய்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 15 லட்சம் ஃபாலோயர்ஸ் கொண்ட எனது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்துவிட்டார்கள். மேலும், அதில் சில ஃபன்னி வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். இது குறித்து நான் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளேன். அவர்களும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கையாக கூறியுள்ளார். கூடிய விரைவில் எனது ஃபேஸ்புக் பக்கத்தை பெறுவேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here