சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்ட து. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாநாடு பட த்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேஜி அமரன், எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், டேனியல் போப், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் இரவு நேர ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் முதல் பாடல் வரும் 14 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளிவரவில்லை.
இந்த நிலையில், முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விரைவில் மாநாடு முதல் சிங்கிள் டிராக் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதலால், ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ மாநாடு முதல் சிங்கிள் டிராக் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.