தனது மனைவி ஸ்ரீரஞ்சனியுடன் இணைந்து சின்னத்திரை நடிகர் அமித் பார்கவ் கொரோனா பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நாட்டையே உலுக்கிய கொரோனா 2ஆவது அலையின் காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகினர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட து. தற்போது சென்னையில் உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதியுடன் லாக்டவுன் முடியும் நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்தது. இந்த நிலையில் சின்னத்திரையில் அதிக பிரபலமான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஜோடி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறியூட்டிகள் என்று வழங்கி வருகின்றனர்.
நடிகர் அமித் பார்கவ் டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கண்ணாடி என்ற க்ரைம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதே போன்று ஸ்ரீரஞ்சனியும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.