Home Celebrities நாட்டுக்காக தடுப்பூசி போட்டுக்கோங்க: விடுதலை பட ஹீரோ!

நாட்டுக்காக தடுப்பூசி போட்டுக்கோங்க: விடுதலை பட ஹீரோ!

132
0

தடுப்பூசி போட்டு தனக்கு 6 நாட்கள் ஆன நிலையில், தான் நார்மலாக இருப்பதாக கூறி, நாட்டுக்காக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க என்று விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரையில் தளர்வுகளின்றி லாக்டவுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர், நயன் தாரா, விக்னேஷ் சிவன், பவித்ரா லட்சுமி, ரித்விகா, வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, கீர்த்தி சுரேஷ், கௌதம் கார்த்திக், ரம்யா பாண்டியன், அசோக் செல்வன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் தேதி தனது மனைவியுடன் இணைந்து சூரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்து சூரி டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்னைக்கு நானும் என் மனைவியும், பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டு ஒரு வாரம் ஆன நிலையில், நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு; எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல்சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு, இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக! என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here