Home Celebrities Kamal Haasan: கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் தேசிய விருது ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

Kamal Haasan: கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் தேசிய விருது ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

376
0

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவு சகோதரர்கள் இணைந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல் ஹாசனுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இந்த கூட்டணியில் விக்ரம் படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தில் கமல் ஹாசனுன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசி, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். முதலில் சத்யன் சூர்யன் தான் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவருக்குப் பதிலாக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விக்ரம் பட த்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிப்பதற்கு ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிப்பதற்கு நடிகர் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் கமல் ஹாசன் ரொம்பவே பிஸியாக இருந்ததால், விக்ரம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுக்குப் பின் மீண்டும் விக்ரம் படத்தை தொடங்கலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா 2ஆவது அலையின் விளைவாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விக்ரம் படமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், தொடர்ந்து விக்ரம் படம் குறித்து அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. பட த்தின் முக்கியமான காட்சிகள் அனைத்து ஒரு ரெஸ்டாரண்டுக்குள் எடுக்கப்படும் காட்சியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 60 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதோடு, இந்தப் பட த்தில் கமல் ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். புதிய தொழில்நுட்பத்தை அவர் இந்தப் பட த்தில் பயன்படுத்துகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், விக்ரம் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக கேஜிஎஃப் சேப்டர் 1 படத்திற்கு சிறந்த சண்டைக் காட்சிக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவு என்ற அன்புமணி மற்றும் அறிவுமணி சகோதரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆதலால், சண்டைக் காட்சிக்கு ஒன்றும் பஞ்சமிருக்காது. கொரோனா லாக்டவுன் முடிவுக்குப் பின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து மீண்டும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here