Home Celebrities K D Chandran: நடிகை சுதா சந்திரனின் தந்தை காலமானார்!

K D Chandran: நடிகை சுதா சந்திரனின் தந்தை காலமானார்!

407
0

நடிகரும், நடிகை சுதா சந்திரனின் தந்தையுமான கே டி சந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். பலரும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், நடிகை சுதா சந்திரனின் தந்தையுமான கேடி சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சுதா சந்திரன், சர்வம் சக்திமயம், தர்மம், நம்பினார் கெடுவதில்லை, வசந்த ராகம், சின்ன தம்பி பெரிய தம்பி, சின்ன பூவே மெல்ல பேசு, தாயே நீயே பேசு என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமா தவிர தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார். ஜெயம், கலசம், தென்றல், சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ஸ்டோர்ஸ் என்று பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here