Home Celebrities Pa Ranjith: சூர்யாவை இயக்கும் இயக்குநர் பா ரஞ்சித்?

Pa Ranjith: சூர்யாவை இயக்கும் இயக்குநர் பா ரஞ்சித்?

173
0

சூர்யா40, வாடிவாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

சூர ரைப் போற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 40ஆவது படமான சூர்யா40, வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர, நவரசா என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். சூர்யா40, வாடிவாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

அட்டகத்தி படம் மூலம் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பா ரஞ்சித். அதன் பின் இயக்கிய கார்த்தியின் மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பு கொடுக்கவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தை கொடுத்தார். கபாலி படம் ஹிட் கொடுக்கவே காலா படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்தார். இயக்குநராக மட்டுமல்லாமல், நீலம் புரோடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இதன் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்த தாக சூர்யாவை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருக்கிறதாம். எனினும், சூர்யா – பா ரஞ்சித் கூட்டணி குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here