Home Celebrities Sindhuja: அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

Sindhuja: அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

218
0

கொரோனா தொற்றால் உயிரிழந்த நடிகர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்களில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்தும் ஒருவர். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரைத் தொடர்ந்து, இயக்குநர் தாமிரா, பாண்டு, டிகேஎஸ் நடராஜன், நெல்லை சிவா, நடிகர் மணிமாறன், ஆட்டோகிராஃப் கோமகன், தாதா87 பட தயாரிப்பாளர் கலைச் செல்வன் என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிந்துஜா உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிந்துஜாவைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜூம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில், அவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது மனைவி சிந்துஜாவின் உடலுக்கு பி பி இ சூட் எனப்படும் கொரோனா உடையில் சென்று கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், சிந்துஜாவின் உடலுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதே போன்று சிவகார்த்திகேயனும் தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here