தான் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வனிதா விளக்கம் கொடுத்துள்ளார்.
மூன்று முறை திருமணம் செய்தும் சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை யார் என்றால் அது வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சமையல் குறிப்பு தொடர்பாக யூடியூப் சேனல் தொடங்கி, சமையல் டிப்ஸ் கொடுத்து வருகிறார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு ஒரு மகனும், 2005 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தனர். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். வனிதாவின் மகன் அவரது தாத்தாவான விஜயகுமார் வளர்ப்பில் இருக்கிறார். மகளை வனிதா வளர்த்து வருகிறார்.
இதையடுத்து, 2007 ஆம் ஆண்டு பிஸினஸ்மேனும் மற்றும் நடிகருமான ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவரும் 2012 ஆம் ஆண்டு சட்டப்படி பிரிந்தனர். மகளை வனிதாவே வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், தான் கடந்த ஆண்டு 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்தார். ஏற்கனவே பீட்டர் பால் திருமணமான நிலையில், அவரது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக பீட்டர் பாலின் முதல் மனைவி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணத்தை முடித்த கையோடு கணவர் மற்றும் தனது மகள்களுடன் கோவா சென்று வந்தார். அங்கு வனிதா மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பீட்டர் பாலை அவர் பிரிந்தார்.
இந்த நிலையில், வனிதா 4ஆவதாக கொல்கத்தாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனிதா, டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படியே இருக்கவே விரும்புகிறேன். எந்தவொரு வதந்தியையும், பரப்பவோ நம்பவோ வேண்டாம் என்று கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.