இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மற்றும் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக கூட்டணியமைத்த படம் லாபம். ஸ்ருதிஹாசன் குரலில் யாழா யாழா பாடல் வெளியானது.
லாபம் படத்தில் விஜய் சேதுபதி சமூக ஆர்வலராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். டி.இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
டி.இமானின் இசையில் யுகபாரதி வரிகளில் ஸ்ருதிஹாசன் பாடிய யாழா யாழா பாடல் கடந்த மாதம் வெளியானது. தற்பொழுது அதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கியுள்ளது. ஆனால் இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகவில்லை.