Home celebrities Jyothika: பிரபாஸூக்கு தங்கையாக நடிக்கும் ஜோதிகா!

Jyothika: பிரபாஸூக்கு தங்கையாக நடிக்கும் ஜோதிகா!

3703
0

நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடிகை ஜோதிகா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

நடிகர் யாஷ் நடிப்பில் திரைக்கு வந்த சூப்பர் ஹிட் படம் கேஜிஎஃப். இந்தப் படத்தின் மூலமாக தன்னை ஒரு சிறந்த இயக்குநராக அடையாளம் காட்டியவர் இயக்குநர் பிரசாந்த் நீல். ஒரு இயக்குநரால் இப்படியெல்லாம் கதை கொடுக்க முடியுமா? என்று யோசிக்கும் அளவிற்கு கேஜிஎஃப் படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்தின் 2 ஆம் பாகமும் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் பிரபாஸூக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடிகை ஜோதிகாவும் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக நடிகை ஜோதிகா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சலார் பட த்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleKani Vaccine: தடுப்பூசி போட்டுக் கொண்ட குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி!
Next articleAnjana Rangan Vaccination: தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜே அஞ்சனா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here