தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் தயங்க வேண்டாம், தடுப்பூசி போட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது. இனி வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த், அருண் விஜய், சிம்ரன், காயத்ரி, கல்யாணி பிரியதர்ஷன், வேல்முருகன், கௌதம் கார்த்திக், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா பாண்டியன், திவ்யதர்ஷினி என்ற டிடி, ராதிகா ஆப்தே, விஜே அஞ்சனா என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று எனது முதல் கோவிட் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். தயங்க வேண்டாம். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். மாஸ்க் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா பரவலை தடுப்பதை உடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Got my first shot of covid vaccine! Don’t hesitate, get vaccinated, wear masks, stay safe! Lets break the chain! #TogetherWeCan pic.twitter.com/c8NrAcMT0J
— Harish Kalyan (@iamharishkalyan) May 22, 2021