Home celebrities Netrikann: நயன்தாராவின் நெற்றிக்கண் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியீடு!

Netrikann: நயன்தாராவின் நெற்றிக்கண் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியீடு!

1784
0

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள் நெற்றிக்கண் படத்தின் இதுவும் கடந்து போகும் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல் முறையாக நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ள படம் என்றால் அது நெற்றிக்கண். கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவள் பட இயக்குநர் மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் விக்னேச் சிவன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பார்வையில்லாமல், அடுக்கடுக்காக கொலை செய்யும் சீரியல் கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து அஜ்மல், மணிகண்டன், சரண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், நெற்றிக்கண் படத்தின் முதல் சிங்கிள் டிராக் இதுவும் கடந்து போகும் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். என்னதான் பார்வையற்றவராக நடித்திருந்தாலும் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இதுவும் கடந்து போகும் என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவும் கடந்து போகும்

சுடரி இருளில் ஏகாதே

வெளிதான் கதவை மூடாதே

அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே

அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே

மழை காற்றோடு போகும் வரை

போனால் என்ன

அது ஏதோ ஒரு பூவின் துணை

ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே…

உடனே வலிகள் மறைந்து போகாதே

சில நாள் வரைக்கும்

அதை சீண்டாதே

அதுவாய் மறக்கும் பின் தொடராதே

இதுவும் கடந்து போகும்….என்று அந்த பாடல் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வரிகளும் அர்த்தமுள்ளவையாக காயத்திற்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleThe Family Man 2: டூப்பே இல்லாமல் பைட் பண்ண சமந்தா: வைரலாகும் வீடியோ!
Next articleChiyaan60: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #CVFSaysBeVaccinated!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here