கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நடிகை அம்மு அபிராமி தற்போது அதிலிருந்து மீண்டு வந்ததை சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த பைரவா படத்தில் மெடிக்கல் கல்லூரி மாணவியாக நடித்திருந்தவர் நடிகை அம்மு அபிராமி. அதன் பிறகு என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், தானா சேர்ந்த கூட்டம், துப்பாக்கி முனை, அசுரன், தம்பி என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட, சூர்யா நடிப்பில் உருவாகி வரும் நவரசா என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். அதோடு, தான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அனைவரையும் வீட்டிலேயே இருக்கும் படியும், மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடவுளின் அருளாலும், உங்களது வாழ்த்துக்களாலும் கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டேன். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், மாஸ்க் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், உங்களால் முடியவில்லை என்றால், வெளியில் செல்வதை தவிருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you all pic.twitter.com/Tljo39h49M
— AmmuAbhirami (@Ammu_Abhirami) May 11, 2021